வெந்து துடித்தது வீரம்
வீழ்தலில் தவிக்குது ஈழம்
அன்று பட்டவை அவலம்
அழிப்பில் மீள்வதே தேசம்
இன்றும் நிகழுதே நாளும்
ஈனர்கள் ஆட்சியின் கோரம்
வெந்தணல் சுட்டிடும் அவலம்
வீழ்ச்சியில் அழிக்கிறார் மனிதம்
ஒற்றுமை வேட்கையே உறுதி
அத்தனை சாட்சியும் நியதி.
நன்றி
ப. வை அண்ணா தொடர்பணிக்கும் பங்காளர்கள் கவிமிடுக்கிற்கும் நனிமிகு நன்றிகள்.