நிலைமாறும் பசுமை…
புரட்சி நிறைந்த புவியின் வாழ்வு
பூக்கும் மரங்கள் செயற்கையின் காவு
இயற்கை குன்றி இயல்பு மாறுதுபச்மை வரண்டிட பாதை செப்புது
பூச்சிக் கொல்லியும் புது வகை உரமும்
நிறைந்த காய்கறி பயன்பெறு யுத்தியும்
விளைந்து பெருகிட விளைச்சல் நிறைந்திட
அழியுது இயற்கை ஆளுது செயற்கை
நானில வளமே நாணிக் குறுகுது
நாம் வாழ் உலகே நச்சாய் மாறுது
நிலத்தின் உயிரினம் நிர்க்கதியாகுது
வளத்தில் பூமி வனப்பில் குன்றுது
மண்ணின் அரிப்பு மரங்களின் தறிப்பு
மாந்தவினத்தின் மதியற்ற செயலில்
பசுமை மாறுது பாரே இருளுது
நிலையது மாறும் நித்திலம் மீட்க
அறிவது கொண்டு எழுதலே வெற்றி
ஆற்றலைக் கொண்டு செயல்படல் யுத்தி.
நன்றி