வைகாசி வனப்பில்..
பசுமை செறியும்
பாரே வியக்கும்
எழிலில் திளைக்கும்
ஏற்றம் விளையும்
விடியல் சிறக்கும்
வியூகம் பிறக்கும்
அகத்தில் ஒளியே
ஆயிரம் நிலவாய்
தரணி ஓளிரும்
தளர்வு விலகும்
தன்னம்பிக்கை வானம்
தட்டும் மிடுக்கில்
உலகே வசமாய்
உன்னதமாகும்
வைகாசித் திங்கள்
வரட்சி போக்கும்
வனப்பை நிறைக்கும்
பூக்கள் எழிலே
புன்னகை முற்றம்
பாக்கள் இசைக்கும்
பாரே வியக்கும்
பெளர்ணமி எழிலாய்
பயணிக்கும் பாரே
உளத்தில் உரத்தை விதைக்கும் நேசி
அன்னையர் தினத்தை மே எட்டின்
மேன்மையில் ஏற்றும்.
நன்றி