வேண்டும் வலிமை..
வலிமைத் திடமும் வாழ்வின் உரமும்
தோள்கள் தாங்கும் துணிவின் பலமும்
ஆழமறிந்த கடலின் படகு
ஆற்றுப்படுத்தும் ஆதரவின் துடுப்பு
தோற்றோம் என்பதை தூரவிலத்து
தோல்வி வாழ்வின் முதற்படி முனைப்பு
பக்கத் துணையாய் பயனூறு வாழ்வில்
பாதிப்பின் விம்பம் பலப்படும் அரணாய்
இடுக்கண் களைதல் இனிதே நிமிர்வு
மாற்றுத் திறனின் மதியின் வியூகம்
மாற்றார் வாழ்வில் உறுதுணைப் பயணம்
ஒத்தடமாகும் ஒற்றுமை நிலைக்கும்
போற்றும் தகமை புனிதம் நிறைக்கும்
வேண்டும் வலிமையே வெற்றிப் பெருக்கு
கற்றுக் கொடுத்தலே காத்திட மிடுக்கு
கணதியற்று தாங்கல்பயிற்று
காத்திட உலகை அமைத்திட உழை
காக்கும் வானாய் கலக்கத்தை உடை.
நன்றி
வாசிப்பும் தட்டிக்கொடுத்து பாராட்டும்
வாராந்தப்பணிக்கும் நன்றி மிக்க நன்றி.