இல்லையேல்……
காலத்தின் கரிசனை
காத்திடம் உழைப்பு
காசினியை மெருகேற்றும்
கடமையின் விதைப்பு
அழகுறு அகிலத்தை அலங்கரிக்கும் சிறப்பு
தினமாகும் தினக்கூலி
தேசத்தின் முதுகு
வளமாக்கி உலகாளும்
வருமானச் செறிவு
எதற்குமே மூலதனம்
தொழிலாளி இணைப்பு
இல்லையேல் உலகநிலை
எதுவாகும் உணர்த்து!
நன்றி