வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

கவிவீச்சு…
பாமுகத்தின் பிரசவமே
பல கவிஞர் தொகுப்பு நூலே
கவி வீச்சு உருவாக்கம்
காலத்தின் தொகுப்பாகும்
பத்து நூல் பிரசவமாய்
பாரிலே வேரூன்றும்
பதிவிற்கு உரமிட்டு
எதிர்கால நிமிர்விட்டு
என்றுமே வலுச்சேர்க்கும்
தொழில்நுட்ப கலைஞரும்
தொலைநோக்குப் பார்வையும்
தொண்டாக்கி இணைக்கின்ற
பாமுகத்தின் பாரிய பணி இதழே
மின்னிதழின் மிடுக்கோடு
நம்மவரின் உருவாக்கம்
நானிலத்தில் வேரூன்றும்
நடாமோகன் சிந்தையது
எதிர்கால விருட்சமாய்
விழுதூன்றி வியாபிக்கும்
இருபத்தி நான்காண்டாய்
இலக்குடன் வியாழன் கவி
உரமாக்கி உய்தறிந்து உலகையே
வியக்கவைக்கும் கவிஞர்கள் குழாமுடன் காத்திடமாய் நன்றி
கவிக்களத்தை காவியமாய் கருத்துரைக்கும் சோதரிகள் யாவருக்கும் வாணி மோகன் வலுவிற்கும் கவிவீச்சு நூற்கள்
தலைசாய்த்து நன்றியிடும்.
நன்றி
மிக்கநன்றி