சித்திரையின் சித்திரங்கள்…
வலுவோடு எழுகின்ற விரிகதிரின் விவேகம்
வளமாக்கி தருகின்ற உலகின்கண் நிமிரும்
இளவேனில் தழுவும் இல்லங்கள் மிளிரும்
இயலுமே மிடுக்கு இல்லாமை விலக்கு
பசுமையின் படர்வு பகலாகும் உலகு
சித்திரைப் புலர்வு சிறக்குமே வாழ்வு
நம்பிக்கைத் திடமே நாளைக்கு உறுதி
சித்திரை வரையும் சித்திரைக் கோலம்
இத்தரை நிறையும் இன்னொரு பாகம்.
நன்றி