சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

மருகிவரும் காகிதங்கள்….
உருகி எழுதிட
உள்ளத்தைப் புடமிடும்
எழுத்தில் பதியம்
எண்ணத்தின் கோர்ப்பு
அன்றைய தொடர்பாடல்
அழியாத காவியம்
இன்றோ உருமாற்றம்
இல்லை உணர்வோட்டம்
சுருக்கத்தின் பதிவு
உடனான பகிர்வு
காலத்தின் வேகம்
கணதியற்ற விவேகம்
கசங்கிய கடிதமும்
தலைப்பின் சேலையில்
தக்கவைத்த பாசமும்
தகர்ந்தே விலகுது
தலைமுறை மாறுது.
மலிந்த மனிதமாய்
மாறுபடும் உலகமாய்
விரையுதே வாழ்வு
விலகுதே உறவு.
நன்றி
மிக்க நன்றி