அதனிலும் அரிது….
பகுத்தறிவு மிகையாகும் பண்பாடும் உலகாளும்
எடுத்தஅடி வியப்பாகும் ஏற்றமே மிளிர்வாகும்
தொடுத்திடும் மலர்ப்பூக்கள் மாலையாய் உருமாறும்
தொன்மையின் விவசாயம் தொப்புளின் கொடியாகும்
எண்ணற்ற முகிழ்ப்பினை உணவற்ற யுகத்தினை
உயிர்ப்பிக்கும் விளைபயிரே உலகிற்கு மூலதனம்
நோயற்ற வாழ்விற்கு ஈடேது இணையேது
ஏதிலியின் தளம்பலுக்கு உதவுகின்ற கரம் நூறு
நட்பென்ற நயத்திலே நம்பிக்கைப் பலத்திலே
ஊற்றாகும் உணர்வுக்கும் உரிமையின் உறவுக்கும் மேலாக ஏதுண்டு
மிளிர்கின்ற வாழ்வுண்டு
அதனிலும் அரிது மானிடராய் மதிப்பு
மாசின்றி மிளிரட்டும் மனிதத்தின் வாழ்வு.
நன்றி