சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

பட்டினி….
பட்டினி வாழ்வின் பரிதாபம்
பறிபோகும் உயிர்கள் ஏராளம்
எண்ணற்ற நாட்டில் கொடூரம்
ஏழைகள் வாழ்வில் அகோரம்

தாயக மண்ணில் தாராளம்
தவிக்கும் மக்கள் பலராகும்
அரசின் வரைமுறை தடைச்சட்டம்
அவலத்தின் பிடிக்குள் அடைக்கலம்

வாழ்வின் மூலமே மின்சாரம்
வரட்சி காணூதே தினம்தோறும்
வருமானம் குன்றுதே தினம்தோறும்
வறுமை வளரும் அதிகாரம்
பட்டினி போக்கிட பாதையிடு
பாரே விலத்திட அறைகூவலிடு.
நன்றி மிக்கநன்றி