வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

அனுபவ ஆசான்…
ஒற்றைவழியில் ஒரு பயணம்
கற்றுத் தருமே பல பாடம்
வெற்றுத் தாளில் எழுத்தாகி
வெற்றி கூறும் உயர் ஆசான்

பட்டே தெளிந்தோர் பலராகும்
பாடுபட்டே உழைப்போர் வழிகூறும்
விட்டே அகலா விருட்சமிது
விளைவு கூறும் பட்டறிவே

நாளும் நாளும் நம்மோடு
நகரும் பொழுதின் சிந்தை போல்
வாழவில் தொடர்ந்தே வடம்பற்றும்
வற்றாச் சுரங்கம் இவ்வசான்
கற்றோம் பலதை கடல் போல
கல்வியென்னும் உயர்நிலைக்கு
கருத்தில் ஏதும் கபடமின்றி
பெற்றுத் தருமே பெரும் பாடம்
இதுவே எமது உயர்பீடம்.
நன்றி
மிக்க நன்றி