வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

உண்டியல்.
உதவும் உன்னதம்
உறவுகள் நேசம்
அன்னை தேசம்
அனுதினம் பாசம்
ஒன்றிக்கும் ஒற்றுமை
இன்னொருமுறையேனும்
மாதம் ஒன்றாய்
மனங்களில் நினைவுத்
சேமிக்கும் உண்டியல்
சேகரிக்கும் அன்பை
சேர்க்குமே ஆதரவை
பராமுகமற்ற
பரிதாப வாழ்வை
கல்வியின் ஊட்டலை
கருணையின் அகத்தை
ஏற்றிடும் விளக்காய்
எண்திசை ஒளிர்வாய்
ஊட்டிடும் காலம்
உண்மையின் கோலம்
பத்தாம் ஆண்டாய்
பயணிக்கும் பாமுகம்
இளையவர் அகத்தில்
இன்னுமொருமுறையேனும்
உதவுதல் பண்பை
உயிர்ப்பிடும் உரமே.
நன்றி மிக்க நன்றி