விடியலின் உன்னதம்….
காசினிக்கு கதிரவனாய்
வாழ்வியலில் பெண்ணினம்
வளம் சேர்க்கும் உரிமையாய்
வண்ணத்து தூரிகை
உளவியலில் உழுது நிதம்
உரம் சேர்ப்பார் உறவாய்
அன்பினிலே விதையூன்றி
ஆர்ப்பரிப்பார் தாயாய்
ஆசனாய் உருமாறி
அறிவுரைப்பார் வளமாய்
தாதியாய் பணிசுமந்து
தனித்துவத்தைக் காப்பார்
பயணத்தின் வழிகாட்டி
பண்பாட்டின் முகவரி
கல்விக்கு உரமூட்டி
காசினியில் விடியல் தரும்
பெண்ணினத்துப் பெருமை
இல்லறத்தின் உடமை
ஈகைக்கு தகமை
உலகிற்கே விடியல்
உன்னதமே உயிர்ப்பு
தாய்மைக்குச் சிறப்பு
தகுந்த வரம் ஏற்று
தரணிவளம் காக்கும்
பெண்ணினத்துப் பேறே
பெருமைக்கு விடியல்
பேறுகொள் உன்னதமே
பெயர் பொறிக்கும் சரிதம்.
நன்றி மிக்க நன்றி