வாழ்த்தின் உவகையில்…
பாமுகத்து படர்கையிலே பரீட்சயமே
பற்பல நிகழ்வுகளின் அட்சயமே
தொடர்பணியும் தொடர் இணைவும் நிட்சயமே
தொடர்ந்து தரும் பாராட்டும் வாழ்த்துமே உன்னதமே
அகவையதின் உயர்விலே அமுதவிழா
அன்பான ஜெயா அக்கா அற்புதமே
எதிலுமே முதலாகி முகிழ்பவர்
எத்தனையோ விருந்தினரின் இணைப்பாளர்
வாரத்தின் நாட்களெல்லாம்
வற்றாத பங்களிப்பு
அகம்நிறைந்து வாழ்த்திடும்
அகமகிழ்வு
மனமார்ந்த வாழ்த்துக்கள் பல்கோடி
ஆரோக்கிய நிறைவாழ்வே அளப்பெரிது
மரபுக்கவி பவளவிழா வாரத்தில்
மனமுவந்து கற்றல் தரும் ஆசானும்
மனமொன்றி கற்றிடும்
கவியாளர்
தொடர் பணியின் தேனமுத வண்டுகளாய்
திரட்டியே சுவைக்கின்றார் தினமாக
கசடற மொழிகின்ற ஆசான் திறனே
ஆக்குதிறன் அறிதிறனின் கூடமாகி
பாமுகமே பல்திறனின் வீரியத்தை
பயிற்றுவிக்கும் பள்ளியாகி
சாலவும் சிறந்திட்ட சான்றுரைத்து
வாழ்த்துவகை கண்டுணர்ந்தோம் காட்சிகள் மெய்ப்படவே
வென்று நீர் வாழ்த்துரைப்பீர்
வீரியமாய் பாமுகத்து பணி மகுடம் தனித்துவமே.
நன்றி