வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

உளவாளி ..
விளைவுகள் பாய்ச்சும் நீரோட்டம்
விளைந்திடும் அறிவின் கண்ணோட்டம்
ஆற்றிடும் காரியம் பலவாகும்
அரும்பென முகிழ்வது அன்பாகும்
அறிதல் தெரிதல் அளப்பெரிதாய்
அன்றெனப் பகிர்தலே நன்றி நிலை
மதிப்பும் உயர்வும் மண்டியிட
மகிழும் உளமே உவகை பெற
உதிரும் வார்த்தை உளமார
பகிரும் நன்றிப் பண்பாடு
பயிலும் வாழ்வின் விலையேது
சேவை சமூகம் செய்தொழிலில்
நாளும் பலமே நல்வாழ்வு
நட்பு உறவு வாழ்வியலில்
நன்றிக்கு உரித்தே நம்வாழ்வு
என்றும் மறவாக் கைமாறு
எழுத்தில் பதியா பேரேடு
உலகை உணர்த்தும் உபகாரி
உளத்தில் நிலைக்கும் உளவாளி!.
நன்றி.