வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

கஞ்சா..

கஞ்சா…
தாவரம் செடியே கஞ்சா
தகுந்த மருத்துவச் செடியே கஞ்சா
தக்கபயனது விபத்தின் கஞ்சா
தம்மையே ஆட்கொல்லும் போதை கஞ்சா
எத்தனை வகையில் கஞ்சா
எண்ணற்றோர் வாழ்வில் கஞ்சா
அடிமையாய் ஆக்கியே கஞ்சா
அதி தாண்டவம் ஆடுது கஞ்சா
விழிபுணர்வற்றோர் வாழ்வில் கஞ்சா
விதியையே மாற்று கஞ்சா
குடியது ஆகியாகி கஞ்சா
கொடூரமாய் தாக்குது கஞ்சா
நாளைய சந்ததி நலிவுறக் கஞ்சா
நாளுமே நம்மை அடிமையாய் கொல்லுது கஞ்சா

செடியென வளர்த்திடும் கஞ்சா
சிறப்பிலே சிறு மருத்துவத் தகமை
அளவோடு அருமருந்தெனக் கஞ்சா
அளவுக்கு மூஞ்சியும் வேளை
ஆபத்தின் உபாதையில் கஞ்சா
நோயினில் நொந்தே வீழ்ச்சி
நோக்கற்ற வாழ்வின் ஆட்சி
போதையின் பிடிக்குள் கஞ்சா
பொசுக்குதே வாழ்வினைக் கஞ்சா

நன்றும் தீதும் நன்கறிந்திடல் நலமே
நாமே நம்மை புடமிடல் தகுமே
அளவுக்கு மிஞ்சின் அமிர்தமும் மருந்தே
கஞ்சாப் போதை உயிரின் உபாதை
உருக்குலைக்கும் உலகின் வாழ்வை
வழியது மாறின் வலியது பாதை
வகுத்தே ஆய்ந்து வருங்காலம் செதுக்கின்
கஞ்சா வெற்றுத் தாவரமாகும்
கணதி குன்றிய வாழ்வு துலங்கும்
மருத்துவச் செடியாய் கஞ்சா வாழ்வு
மனிதம் காத்திடும் மகத்துவமாகும்.
கஞ்சாப் போதை கடந்து போகட்டும்
கம்பீர உலகாய் காத்திடம் பேணட்டும்.
நன்றி மிக்க நன்றி