சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
குருதிப்புனல்….
அறுபடா வேரின் அத்தியாயம்
ஆணிவேர் தாங்கிய அவலமாகும்
முள்ளிவாய்க்காலில் புதைந்த கோரம்
முற்றாக எம்மினம் குருதிப்புனலில்
குற்றுயிர் கோரக்கொலை அடைக்கலமானோர் அவலம்
ஆறாது ஆறாது குருதிப்புனல்
ஆண்டுகள் பதினைந்து அவலச்சுமை
கொன்றழித்த தேசத்தின் கோரவடு
எதிலிகள் வாழ்வான தேசவலி
குருதியின் புனலாக கொந்தளிக்கும்
வெந்தணிலின் நினைவே வேகும்வரை!
நன்றி
மிக்க நன்றி!