வணக்கம்
அழகு…
அழகு அழகு தாயவள் அழகு
தரணியில் வாழ்வு
தனித்துவ அழகு
உள்ளத்தின் அழகில்
மெய்ப்படும் மேனி
இல்லத்தின் அழகில் ஈகை மிகையே
ஈரத்தின் வாழ்வில் கனிவது அன்பு
வையம் அழகில் வற்றாச் சுரங்கம்
வசப்பட வாழ்வது உயிர்களின் இன்பம்
அழகின் பின்னலில் ஆயிரம் கோலம்
அழகே உலகென
மிளிரும் வேளை
அவரவர் வாழ்வில்
அழகியல் பேசும்!
நன்றி