தைமகளே வருக…
தரணி நிலம் போற்றும்
தைரியமும் நிறையும்
விடியல் தினம் ஏற்றும்
தைமகளே வருக
தன்னிறைவில் நிறைக!
வழிகள் பல காட்டி
வாழ்வில் ஒளி ஏற்றி
வளங்கள் பல நிறைத்து
வையமது காக்கும்
கதிரோனை போற்றும்
தைமகளே வருக
தன்னிறைவில் நிறைக!
உலகமது உனது
உதயமது விடிவு
அறிவின் திறன் அரிதே
ஆற்றலது மிடுக்கே
தைமகளே வருக
தன்னிறைவில் நிறைக!
தொடருவது திங்கள்
தொடக்கமது தையே
அகரமது சுழித்து
ஆண்டதனை தைக்கும்
தைமகளே முதன்மை
தன்னிறைவில் பெருமை!
நன்றி
தொடர்சரிதம் நிறையட்டும்
வாழ்த்துக்கள்.