வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

மூலதனம்..
ஆதார மூலதனம் அவனிக்கு ஆயிரம்
அகலொளியாய் திகழ்வதே ஆற்றலின் பெரும்பலம்
மனிதத்தின் நேயமே மாற்றத்தின் தோப்பு
அகிலத்தை ஆளுமே ஆற்றலின் மிடுக்கு
வரமாக கிட்டிடும் தொழில்களின் முனைப்பு
உருவாக்கம் உலகிடை ஒயாத
உழைப்பு
கணக்கையே மாற்றிடும் காலத்தின் கணிப்பு
அவதானம் அனுமானம் குன்றாத விதைப்பு
வீழ்த்தலில்
எழுவதே வெற்றியின் கணிப்பு
வேண்டிடும் மூலதனம் எதற்குமே முதன்மை
விலத்தாது விதையூன்றி
விருட்சமாய் நிமிர்த்து.!
நன்றி