வணக்கம்
மாவீரரே….
போரின் அவலங்கள் புதையுண்ட உயிர்க்கொடைகள்
சாலவும் சிறந்திட்ட சரித்திரப்படுகொலைகள்
ஞாலமே மெய்சிலிர்க்கும் நம்பிக்கை வார்த்தையில் கூறுபோட்டு
எம்மினத்தை குற்றுயிராய் தகர்த்தவர்கள்
தாய்நிலக் காப்பிற்காய் தம்முயிரிர்ந்தவர்கள்
தன்னம்பிக்கை முனைப்பிலே எதிரியை வென்றவர்கள்
வீரமே உணர்வென வித்தான மாவீரர்
வெந்தணல் விழ்ந்தே ஆகுதியானவர்கள்
சாவிலும் சரித்திரம் படைத்தவர்கள்
சந்தோச வாழ்வையே எமக்கெனப் புதைத்தவர்கள்
தமிழீழ விடியலே உயிருக்கும் மேலென
விடுதலை வேண்டியே விடுதலையானவர்கள்.
மாவீரர் கனவுகள் விடியலின் விதைப்புக்கள்
விடுதலை வித்துக்கள் தமிழர் வரலாற்று முத்துக்கள்.
நன்றி