வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜேர்மனியிலிருந்து

07.12.22
ஆக்கம்254
ஞாபக நினைவுகள்

நடந்து வந்த பாதையில்
நாம் கடந்து போன பதிவுகள்
மனதில் கவலைகளாகப்
பிரசுரிக்கின்றது
இதன் பிரதியே கனவெனும்
குழந்தையைத் தினமும் இரவில்
பிரசவிக்கின்றது

காவிச் சென்ற சடங்குகள்
தேம்பித் தேம்பிக் கொதிக்குதே
மேவி நின்ற குடும்ப உறவுகள்
கூட்டுக் குடும்பமாய்த் திரண்டதே
உலாவிய முற்றத்தில் மார்கழி
இருட்டில் ஒன்றாயமர்ந்து
குப்பி விளக்கில் நிலாச்சோறு
உண்டது சுவையூறுதே

மார்கழியில் கடும் மழையில் நனைந்து
காகம் போல் நனையுதுகள் என்று
அம்மாவிடம் செல்லத்திட்டு வாங்கியதும்
ஞாபக நினைவாய் வந்து வந்து போகுதே.