சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜேரமனியிலிருந்து

06.12.22
ஆக்கம் 86
மார்கழி
மார்கழி மழை கொட்டியது
மித மிஞ்சி வயல் வரம்பும் முட்டியது
கோடை வெப்பமதில் காய்ந்து
வெடித்த நிலமோ குளிர்ச்சியால்
பாராட்டியது

தை மாதப் பயிருக்கு நல் அறுவடையென
விவசாயி உளம் மகிழ்ந்து
மார்கழிக்கு மாலை போட்டது

புதுவருடம் பிறக்கப் போகிறதென்று
புத்தாடைகள் பல வர்ணமுடன்
பாதையோரக் கடைகளில் தொங்கி
சந்தோஷத்தில் ஊஞ்சல் ஆடியது

கிறிஸ்து பாலன் பிறந்து
நல்வழி காட்டிடு என
மாந்தர் மனமோ வேண்டியது.