வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

13.10.22
வியாழன் கவிதை
ஆக்கம் 247
வாழ்ந்தென்ன இலாபம்
தனியாகப் பேசிடும் மாந்தர் துணையின்றியே
மனிதனாகப் பிறந்து
மிருகமாய் வளர்ந்து
சிதைத்திடும் வதை
முகாமின்றியே
வாழுமிந்த உலகில்
வந்தவர் தந்ததெல்லாம்
இன்பமதைவிட துன்பமன்றோ

ஏனிந்தப் பிறப்பு எத்தனை கோடி அழுகுரல்
சிந்திக்கத் தெரியாதவர்க்கு சீற்றம்
எதற்கு
திருந்தாத உள்ளம் இருந்தென்ன இலாபம்
பொருந்தாத பிள்ளைகள் பிறந்தும்
வேதனையன்றோ

பணத்தில் சோதனை
பிணத்தில் சாதனை
கணத்தில் பிரிவு
குணத்தில் நெரிவு
பெற்றோர் வயது முதிர்ந்தால் சிறைக்கூடத்திலே
பிள்ளை வயது வந்தால்
அறைமாடத்திலே
கணவன் மனைவி ஒருவர் இறந்தால்
மற்றவர் யாருமின்றி
தனியே வாடி ஒருபிடி
சாம்பலாவதில் வாழ்ந்தென்ன இலாபமன்றோ