வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

29.09.22
ஆக்கம்-245
தியாகி தீபச்சுடர் திலீபன்
சைவத் தமிழ் வித்தியாசாலை
தமிழ் பண்பாட்டுக்கே உதித்த
ராசையா வாத்தியார்
வெள்ளை வேட்டி ஒரு மூலைத்
தலைப்பை ஒரு கை பிடிக்க
விசுக்கி விறுவிறுப்பாய் நடக்கும்
ஐயாவின் நான்காவது மகன்

பலசாலியாய்ப் பிறந்தவன் பாவி
பத்தாவது மாதத்தில் தாய் இழந்தவன்
அன்னை அரவணைப்பின்றி தாய்ப்பாலன்றி
உறவினர் அன்பில் வளர்ந்தவன்
குழந்தையாய் பாலர் வகுப்பில்
எம்மோடு அருகிலமர்ந்தவன்

சொந்த நாட்டின் சோகம் பார்த்து
வெகுண்டான் வேங்கையாய்ப்
பொங்கி எழுந்தவன் தமிழீழ
விடுதலைப் புலியின் அரசியல்
பொறுப்பாளனானான்

நேரடித் தாக்குதலில் பாய்ந்தது குண்டு
பதினான்கு அங்குல குடல் வெட்டப்
பட்ட போதும் களத்தில் பத்திரிகையால்
கவர்ந்தான்

நல்லூர் முன்றலில் ஐந்து அம்சக் கோரிக்கை
முன் வைத்து நீராகரமின்றி பன்னிரண்டு நாள்
இருநூற்றறுபத்தைந்து மணி நேரம் சொட்டு
உமிழ் நீர் விழுங்காது தீபச்சுடராய் விடிவுக்கு
சாட்சியாய் விண்ணுலகம் சென்றானே
வீரத் தியாகி திலீபன்.
35 ஆவது ஆண்டு நினைவாஞ்சலியில் ஆத்மா
அடையப் பிரார்த்திப்போமே.