சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

20.12.22
ஆக்கம்-88
தை மகளே

தை மகளே நீ வருக வருக
சுபகிருது பெயருடன் உன்
வலது காலை அடி எடுத்து
உலகெங்கும் ஒளியேற்றிட
வா மகளே வருக வருக

ஆங்கிலப் புத்தாண்டே
ஆனந்தமுடன் இனிமை தருக
இறந்த காலம் நிகழ்ந்ததெல்லாம்
மறந்து புதுப் பொலிவோடு
மகிழ்வு தருக

வெந்திடும் புது நோய்கள் தீர்ந்து
பசி, பட்டினி ,சோம்பல்,மூடத்தனம்
மறைந்து முயற்சி உழைப்பு தைரியம்
நிறைந்து கிறிஸ்து பாலன் பிறப்பிலே
உலகெங்கும் ஒளி பரப்பி புது மனித
வாழ்வு தருக தருக

மழை,புயல் காற்றழிவு, குளிரால்
துன்புறும் மானிடர்க்கு இன்பம்
சேர்ந்து புத்துயிர் அளித்திட
பிறந்திடும் புத்தாண்டுத் தை மகளே
மனங்குளிர வருக வருக