வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

15.09.22
ஆக்கம்-244
பேசாமல் பேசும் மொழி
முன்னால் இருப்பவரோடு கண்ணால் பேசிக்
கருத்து உருப்பட முகபாவனையில்
கை விரல் பின்னலிட அகத்தினால்
தூண்டிலிடும் சொற்கள் கூண்டிலிட
வாய் திறவாது பேசாமல் பேசும்
மொழியே சைகை மொழி

தரணியிலே அதிக விகிதமானோர்
காது கேளாதவர் பட்டியலிலே
சத்தமாய் உளறும் தொழிற்சாலை,
யுத்தமாய்க் கதறும் அதிவேகக்
குண்டு விமானம்,பீரங்கித் தாக்குதல்,
கனரக வாகனம் போன்றன
வளரும் நாடுகளில் பெருந்தாக்கமே

புரட்டாதி 23 விழிப்புணர்வுடன்
அரங்கேறியது சைகை மொழித் தினம்
இதனாலே உருவானதே
உண்மைப் போராட்டமதில் உரிமைக் குரல்
மௌன அசைவு மொழியிட ஊடகத்தில்
உயிரூட்டி உலகெங்கும் பறை சாற்றி
விழிப்புணர்வு ஊட்டுவதும் இதுவே
சைகை மொழி .