சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

13.09.22
ஆக்கம்-75
சனிக்கிரகமிது
காலி முகத்திடலில் காணாமல்
போனவரின் கூக்குரலது
வேலி அமைத்துக் கூலியின்றி
இரவு பகல் உரத்துக் கத்தியது
கூண்டிலே கைதியாகி
ஊமைக் கனவானது

இது ஒரு கலியுகக் காலம்
எதுவும் எடுபடாத கோலம்
மெய்யை விழுங்கி பொய்
சொல்லுமது போலியானது
வாயைப் பொத்தி பேய்கள்
நடமாடும் இயமனின்
மேடையது ஜெனிவாவிலே

ஜாலியான நரகாசுரன்
போலிக் குண்டு போட்டு
சோலியின்றி நாளைக்
கடத்தும் வேடமது
தமிழினமன்றி ஒட்டு மொத்த
இலங்கையருக்கும் சனிக்
கிரகமிது