வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

18.08.22
ஆக்கம்-239
விதியின் சதியில்
வலியின் கொடுமை வாட்டியவனுக்குப் புரியும்
அதன் அருமை பசித்தவனுக்குத் தெரியும்
போதிப்பவனும் துதிப்பவனும் வாயால்
வெட்டி வீழ்த்துவதில் புரிந்தும் புரியாமலும்
தெரிந்தும் தெரியாமலும் தவிப்பவனுக்கு
எரிச்சல் உண்டாக்கும்

ஏழை பணக்காரன் என்று பாராமலே
துரத்தியது கோவிட்
பதவி ,பத்து தலைமுறை சொத்திருந்தும்
பத்து செக்கனில் பறி போகும் விதியின்
சதி பசியால் துடிப்பவனே

எவனிற்கு எப்ப எது துரத்துமோ
தெரியாத போதும் மாட்டுப்பட்ட
வயிறு கொதிக்க பிழைக்கத்
தெரிந்தவன் உண்ட பசியால்
விழித்தெழுவான்.