வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

15.12.22
ஆக்கம்-255
வாழ்வைத் தொலைத்தவர்கள்

நிலையான வாழ்வு நீர்க்குமிழியாகுதே
வலை வீசிக் காரணமில்லாது
காவல்காரரைக் கடுபபேற்றுதே
உலை வைக்கும் ஊதாரித்தனம்
உலகெங்குமே

வெற்றி வேண்டினாலும்
தோல்வி தேடினாலும்
பொல்லாத போராட்டம்
பரிசிலே பரிசுகெட்டுப் போய்ச்சு

மனங் கொதிக்க சும்மாயிருந்த
மாந்தரையும் கோபமூட்டுதே
முழுமூச்சாய் மூர்க்கத்தனமோடு
பொது இடம் சீரழித்து சிதை
மூட்டுதே
வெந்திடும் வெறித்தனம் ஐரோப்பா
எங்கும் நாளும் பொழுதும் தொடர்
கதையாகுதே

நன்றாக வாழும் வாய்ப்பு இழந்து
வாழ்வைத் தொலைத்தவர்க்கு
எது இலட்சியம் அது அலட்சியம்
மத வெறி பிடித்து மனம் அழுக்காகி
உலகை விட்டு ஊர்ந்து பெயரிழந்து
போகும் உயிருக்கு ஏனிந்தப் பிணவெறி
பிறக்கப் போகும் புது வருடமாவது
இது தீர்ந்திடுமா.