02.08.22
ஆக்கம் 68
குருவிச்சை போல வாழலாமா
எப்படியோ வாழ்வது ஏமாற்றமே
இப்படி நியாயமாவது குற்றமே
அப்பாடி வருகுது வரும்படியென்று
மனசு போன போக்கில் செலவு
குப்பாடி
பச்சைப் பசேலே இளமை
இச்சைத் தசைக்கு குடி, குட்டி அடிமை
கொச்சையாகியது கலாச்சாரம்
கச்சை கட்டி வியர்வை சிந்திய
உழைப்பின் உரிமை
கூழோ கஞ்சியோ குடித்து மகிழ்ந்த
குடிசவாதியின் பெருமை
கடந்ததை மறக்காது அகதிமண்
துறக்காது புட்டி குட்டி இச்சையில்
உறிஞ்சி வாழும் குருவிச்சைகளே
திருந்துங்கள்