வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.07.22
உலகாளும் நட்பே
ஆக்கம்-236
இன்ப துன்பமிடையே உருட்டு பிரட்டன்றி
பொய் இன்றி உண்மையுடன்
இருவர் உள்ளமதில் உருவாகுவதே
அன்பு எனும் நட்பு

உலகம் முழுவதிலும் யார் எவரிலும்
மனதில் உண்டாகி மகிழ்வை
உண்டாக்குமிது உலகாளும்
நட்பு

தொலைவில் இருந்தாலும்
தொலைந்து விடாது தொய்வின்றித்
தொடரும் நேசிப்பு

சிறு துன்பமெனிலும் பெரிதாய்த்
துடித்து எதிலும் விட்டுக் கொடுக்கும்
உயிர்த் துடிப்பு உலகாளும் நட்பாகும்