21.07.22
ஆக்கம்-235
போற்றிடும் நெற்றியடி
எத்தனை சோகம் இத்தனை வயதில்
அத்தனையும் எழுதமுடியாது ஏக்கமுடன்
பெருமூச்செறிகிறது பேனா
ஏதிலியாய் எங்கு போனாலும்
துரத்திய தாயக நினைவுகள்
பசிக்கும் பாலுக்கும் பணமில்லாது
தவிக்கும் நெஞ்சங்களில் பஞ்சம்
புரட்டி எடுக்க
திரண்டு வந்த மக்கள் புரட்டிப்
போட்டு சுக்கு நூறாக்கிய அரசியல்
மிரண்டு போனவர் எடுத்தனரே
ஓட்டம்
தன்னுயிரில் காட்டும் வேகம்
மன்னுயிரைக் கொன்றழித்த விவேகம்
நாட்டுப்பற்றில் வோட்டுப் போட்டவனே
நோட்டம் பார்த்து போட்டானே ஒரு அடி
போற்றிடும் நெற்றியடி சரித்திரம்
படைக்கும்