12.07.22
நிம்மதியாக உறங்காது
ஆக்கம்-65
சின்னச் சின்ன விடயத்திற்கெல்லாம்
கன்னம் வைத்த சீனாவிடம் புகுந்து
பென்னம் பெரிய சிக்கலில் உதிர்ந்து
சன்னம் துழைக்காது சுக்குநூறாகிய
பித்துப்பிடித்த அழகிய முத்துத் தீவு
செல்லும் பாதை தெரியாது -ஒருவர்
சொல்லும் கேட்காது மல்லுக்கட்டி
பில்லைக் கட்டாது தில்லுமுல்லு
முழுதாய் நனைந்தபின் முக்காடு எதற்கு
எல்லாம் தொலைந்த சுடுகாடு
இதற்கு ஏது உறக்கம்
சிங்கள தேசம் இனி நிம்மதியாக உறங்காது
எம் இனத்துக்காகப் போராடியவர்
அன்று சொன்னது இன்றைய
வரலாறு ஆனது