30.06.22
எப்படித்தான் போகுமோ நம்நாடு
ஆக்கம்-233
குழப்பங்கள் கையோங்கி குரல் முழங்கியது
கண்ணீரில் நம்நாடு உச்சக்கட்டமானது
கண்ணகி கண்களில் தெரிந்த உண்மையே
அன்று காவியம் படைத்தது
சொந்த பந்தம் சேர்ந்து சந்தி சிரிக்கும் சூழ்ச்சியே
நாட்டை சுத்தமாகத் துடைத்து வேற்று நாட்டுக்கு
விற்றுண்ணும் சந்தர்ப்பவாதிகள்
தமிழனின் கூட்டைச் சிதைத்து
போராட்டமென்ற ஏட்டைப் புதைத்து
சிங்கள மக்களை ஏமாற்றிய சேட்டை
காலம் மாறி காயமாக ஆறாத வடு ஆனது
ஆண்டாண்டு ஆண்டு வந்த ஆட்சி
பூச்சியமாக மாற விரதம் மூண்ட வரலாறு
எப்படி எங்கு போய் முட்டி மோதி நிற்குமோ