சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

13.12.22
ஆக்கம்-87
துன்பமான இன்பம்

ஆயிரம் மையிலுக்கு அப்பால் இருந்து
அகதி எனும் பெயரில் அந்த ஜீவன்
நுழைந்தது
நாளும் பொழுதும் நிம்மதியின்றி
நீண்ட பெருமூச்சுடன் நெடுநாளாய்க்
கடுங் குளிரில் உழைத்துக் கழைத்தது

ஊரிலிருந்த கடன் அடைத்து அக்கா
தங்கை திருமணம் முடித்திட
அகதி என்றவளை அந்தஸ்துக் கோரிக்
காதலித்து முடிய வயது நாற்பது ஆனது

மனிதன் யார் என்ற வினாவிற்கு விடை
தெரியாமல் ஒரு மொழி பேசும் விலங்காய்
மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து
இரத்த அழுத்தம் ஏறிட வாலிப வயதிலேயே
காத்திருந்தவளையும் கைவிட்டு
வாழ வேண்டிய வாழ்வு தூக்கில்
தொங்கியதே.