21.06.22
ஆக்கம்-63
மீண்டும் களியாட்டங்கள்
கொண்டாட்ட குதூகலம் மீண்டும் கோலகலமே
கொரோனா கோவிட்டும் விட்டுக் கொடுக்காத கோபமே
கட்டுக் கடங்காதவர் நெஞ்சில் சர்வசாதரணமே
திண்டாட்டம் ஆடியவரோ மூடிய வாயும் மூக்கும்
கரை கண்டது போல் முகமூடி துறந்தாச்சு
வீட்டிலே முடங்கிக் கிடந்த மனமோ
மடங்கிப் போய்ச்சு
நாட்டு நடப்புத் தெரியாமலே மூன்று
வருஷம் கழிச்சாச்சு
உக்கிரைன்,ரஷ்யா போரும்
தொடர்கதையாச்சு
என்னதான் செய்வான் மனிதன்
எதுவந்தாலும் வரட்டுமெனத் துணிந்து
சந்தோஷந்தான் மனதை நிறைவாக்குமென
வேண்டியவர் வேண்டாதவர்க்கு அழைப்பை
விடுத்து களியாட்டத்தில் குதித்தான்