வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

16.06.22
அவசர வாழ்வு
ஆக்கம்-230
நாழும் பொழுதும் நேரம் பாராது
உண்ணாது உறங்காது ஊமையாய்
ஓய்வின்றி உழைத்து வாழும் மனிதன்
உறக்கத்திலே உயிர் துறக்கும்
விதம்விதமான துயரங்கள்

எத்தனை ஆசைகளில் மனதின் தேம்பல்
இத்தனையும் இனி நடக்குமா என விசும்பல்
ஏழையாயிருந்தும் அன்று அத்தனை மகிழ்ச்சி
ஆனாலின்று எல்லாமிருந்தும் ஏனிந்தப் புலம்பல்

இருப்பது போதுமென்று மனம் நிறையாது
இன்னுமின்னும் வேணுமென்ற பேராசை
அத்தனை வலி சுமந்து வருத்தம் துறந்து
விரலுக்கேற்ற வீக்கம் மறந்து இதய
யுத்தமுடன் போராடி

அற்ப வயசில் உயிர் குடிக்கும்
அவசர வாழ்வில் புத்தம் புதிய
உலகந் தேடிடுவாரே