14.06.22
ஆக்கம்-62
பாமுகமே நீ வாழ்க ,வளா்க
அகவை இருபத்தைந்து வெள்ளி விழா
தகவைத் தரும் பாமுகமே! வருக வருக
அழகூட்டும் உன் பணி பூ முகமே
உகவை தந்து மனங்குளிர பாமுக
உறவுகள் முகம் மலர வாழ்த்திட
அன்று நீ காற்றலையில் சிறகடித்து
இலண்டன் தமிழ் வானொலியாய்
ஒலித்து வணக்கம் தமிழ் அலையாய்
விழித்து ஆக்கதாரியில் உருவாக்கம்
உயர்ந்திட பணியாளா் நெஞ்சம்
நிறைந்திடுமே
இயக்குனர் நடா மோகன்,வாணி மோகன்,
இராகவி மோகன் சேவை தொடர
பேரும் புகழும் மிளிர இதே புன்னகையுடன்
பூத்துக் குலுங்கிட இன்னும் பல்லாண்டு
வாழ்க வளர்க எனப் பாராட்டி பாமாலை
எனும் பூமாலையிட்டு வாழ்த்திடுவோமே