வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

26.05.22
ஆக்கம்-228
எண்ணம்
இதயத்தில் தேக்கிய ஆசையால்
ஓரு தாய் கர்ப்பம் சுமப்பது போல் சுமந்து
என்றாவது ஓரு நாள் அந்தக் கரு
அபாரமாய் பெரிதாய் வளர்ந்து
உருவம் பெற்று வெளியில் வந்து விடும்

எண்ணத்தில் என்னென்னவோ ஆசைகள்
வர்ணத்தில் பறக்கும் பட்டாம் பூச்சிகள்
ஓரேயொரு கணத்தில் எதிர்காலம்,நிகழ்காலம்
எம் கையில் இல்லாது பறந்தே போயிடும்

விதியை வெல்ல முடியும் எனச் சொல்லுபவரே
விதி வழியே இறந்து விடுவதும்
எம் தலையில் எதுவுமில்லையே
மனதில் தாங்கிடும் எண்ணச் சுமைகள்