24.05.22
ஆக்கம்-60
காத்திருக்கும் பேரிடி
போரினிலே வென்று புலியைக் கொன்றதென்று
பாரினிலே ஊன்றிய பாவம் சாபமானதோ
தேரினிலே ஏறியவர்மீது தேர்ச்சில்லு ஏறுகிறதே
ஊரினிலே வாழவிடாது உதைத்து சேறு எறிகிறதே
வாழவழியின்றிக் கேள்வி கேட்ட வோட்டுப்
போட்ட இனத்துக்கு வாய்ப்பூட்டு
தன் இனத்துக்கே இந்த நிலை என்றால்
தமிழினத்துக்கு எந்த நிலை
சோழியன் குடும்பி சும்மா ஆடிடுமா
ஐம்பத்தெட்டிலிருந்து அழித்தது மாறிடுமா
தனக்குத் தனக்கு சுளகு படக்குப்படக்கு
சந்திரிகா அம்மா போட்டாவே ஒரு பேட்டி
நடிக்குது நாடகம் துடிக்குது வேடம்
வெடிக்குது சூடம் உயிரைக்
குடிக்கப் போகுது பேரிடி