கண்ணீர்தான் மீதி
ஆக்கம் 227
அவலத்திலும் அவலம் முள்ளிவாய்க்கால் பேரவலம்
கொத்துக் குண்டால் பொத்தெனச் சாய்த்து
சொத்தாய் மிஞ்சின எஞ்சிய சிதைந்த
உடற் கூறுகள் ஊன் இறைச்சியாய்
ஊனமுற்று உதிரம் பாய்ந்து உயிரோடு புதைந்த
கொடுமைகள் நீண்ட நொடியில் எரிந்த பிணங்கள்
மறைந்த உண்மைகள் மெளனமாய் நின்ற
சரித்திர வரலாறு
இன்றும் இதற்கு விடிவேயில்லை
என்றும் நினைக்கையில் அஸ்தி
எம் கண்ணீரில் கரைவதுதான் மீதி