வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

01.12.22
ஆக்கம்-253
சிந்திக்குமா வல்லரசுகள்

கனவு எனும் குதிரையிலேறி
கற்பனையில் காலூன்ற
மிதபபவனுக்கு பூலோக
மக்கள் படும்பாடு தெரியாதா

தெரிந்துமே செவ்வாய்க் கிரகமதில்
மாந்தரைக் குடியேற்ற முதல் பரிசோதனையைத்
திட்டமிடும் அமெரக்கா

மக்களில் ஏனிந்த மாற்றம்
கொள்ளையர் குவிவு ,அடிதடி
சண்டை, படுகொலைகள்
பாடாய்ப்படுத்த மாற்றுவழி
ஏதுமுண்டா எனச் சிந்திக்காத
வல்லரசுகள் ஆயுதம் விற்று
அண்டை நாடுகளை அழித்துடுமா

அரசன் ஒழுங்காயிருந்தால்
போராடு் நாடுகள் வீதிக்கு வந்திடுமா