வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

12.05.22
ஆக்கம் 226
நிலைமாறும் பசுமை
சுற்றும் உலகில் சூழல் மாறிட
பற்றிப் பிடிக்கும் மனித வாழ்வோ புதிரிட
முற்று முழுதாய்க் கானகமும் ,புல் வெளியும்
எரிந்து கருகிச் சாம்பலிட

சாக்குப் போக்குச் சொல்லி
நாட்டிய மரங்களை நாறாய்க் கிழித்து
அழித்திடவே ஆரம்பமானது பூகம்பம்

மலையின் பசுமை தெரியாது
கடலின் அருமை புரியாது
மலையைக் குடைந்து கம்பியினால்
கண்டபடி துளைத்து இயற்கையை
நரகமாக்கி மழையை நீக்கி
செயற்கையில் சேர்ந்து அழித்திட

நிலைமாறும் பசுமை போக்க
உலகெங்கும் ஆயிரமாயிரம்
மரங்கள் நாட்டி போற்றிப் பாதுகாத்திட
சர்வதேச தாவர தினமாகிய மே 12இல்
இயன்றவரை முயன்றிடுவோமாக