சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

10.05.22
ஆக்கம்-22
போர்க்களமாயிடுமா
உக்கிரையின் விவகாரம் ஊழிக்காலமாகிறதே
அக்கறை போல் ஆக்கிரமிக்கும் அண்டைநாடும்,
வல்லரசும் முந்தியடித்து முக்காடு போட்டு
உதவுகிறதே

கடுகடுப்பாகும் றஷ்யா கடுகு வெடிப்பது போல்
வெடுவெடுப்பாய் வீர வசனம்
கண்டபடி பேசி காதறுபட
குதறி உதறித்தள்ளும் அமெரிக்கா
துரிதமாக்கும் தடைச்சட்டங்தளின்
தந்திரங்களே

ஏற்க மறுக்கும் புட்டினில் பூகம்பம்
பூச்சாண்டி காட்டிப் பூசி மெழுகிப்
போடும் பொய்க்கால்கள் போர்க்களமாயிடுமா