வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.04.22
ஆக்கம்-224
வேண்டும் வலிமை
குட்டக் குட்ட குனிந்து கூனிக் குறுகியது
போதுமென்று நிமிர்ந்து நிற்கிறது இன்று
தன் இனத்துக்காகப் போராடியவனைச்
சிதைத்து இரத்தம் குடித்த வரலாறு
சீற்றமுடன் சீறுகிறது

உணர்வு கொடுத்த தமிழ் பேசியது குற்றமென
உருக்குலைத்து ஊமையாயிருந்த உண்மை
விதை முளைத்து விருட்சமாய் வளர்கிறது

உதைத்தவன் சாவி எம் கையில் ஊர் உலகம்
கண் திறக்கையில் ஊக்க வலிமையோடு
இனியாவது எம்மண் காத்திட வேண்டும்

நித்தம் சீரழியும் பித்தம் பிடித்த அரசில்
யுத்தமின்றி புத்தம் புதிய பூரண விடுதலை
யுத்தியான புத்தியுடன் கண்டிட வலிமை
வேண்டும்