சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

29.11.22
ஆக்கம்-85
நினைவு நாள்

தமிழுக்காகவும், தாய் மண்ணிற்காகவும்
தமிழினத்துக்கும், தாயக விடுதலைக்கும்
தூய நினைவுகளுடன் போராடித் தம்
இன்னுயிர் ஈந்த நினைவு நாள்
கார்த்திகை இருபத்தேழு

மாசற்ற இலட்சிய உறுதியுடன்
மரணத்துடன் மோதி மர்ணித்த
மண்ணின் மைந்தர் மாவீரர்
போற்றும் இந் நினைவு நாள்

நெஞ்சிலே விதைக்கப்பட்டு
வித்தாக விளைந்து விருட்சமாக
வளர்ந்திடும் வேளை
நய வஞ்சரால் நாசமாக்கப்பட்டு
மண்ணுள் உயிரோடு புதைந்த
மாவீரரின் சாகா வரம் பெற்ற
நினைவு நாளில் பூக்கள் தூவி
பாக்கள் பாடி மலரஞ்சலி செய்து
ஒளியேற்றி வணங்கிடுவோமே.