வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

24.02.22
கவி ஆக்கம்-211
சோதனைக் காலம்
எப்ப பார்த்தாலும் ஏதோ ஒரு யோசனை
இப்ப கேட்டால் காலத்தை ஈர்த்த சோதனை
அப்ப எல்லாம் ஆண்டவன் ஆட்டுவித்த போதனை

தற்போது மனிதன் வேட்டுவைக்க
இயற்கை சீற்றம் கொண்டு
தாறுமாறாய்க் கிழித்து ஈமக்கடன்
செய்யும் ஆராதனை

இனப் பிரச்சனையால் நாடுவிட்டு நகர்ந்து
சுனாமியால் செத்து நொந்து சூறாவளி பெயர்ந்து
வெள்ளத்தால் வெந்து வேதனை பெற
எரிமலை வெடித்து ஏக்கந் தந்து

காடு பற்றி எரிந்து கானக மிருகமிழந்து
கடுங்கால் புயல் காற்று புதுப் பெயரோடு புகுந்து
கொரோனாவும் கோபமுடன் துரத்திய
வரலாற்றுத் துயரமும் உலகெங்குமே.