24.11.22
ஆக்கம்- 252
தலை சாய்ப்போம்
மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய்
தம்மை விடத் தாய் நாட்டை நேசித்து
பசி,பட்டினி,துயரம் பாராது- உயர் நற்
பண்போடு நாளும் பொழுதும்- உடல்
வருத்தி காட்டிலும் மேட்டிலும் அலைந்து
இள வயதிலே தமிழீழ இலட்சித்துக்காய்ப்
போராடி மர்ணித்த மாவீரரே
நெஞ்சிலே வீரம் உறுதி பூண்டு
நஞ்சைக் கழுத்தில் தொங்கவிட்டு
எம் மண் விடுதலைக்காய் உழைத்த
வீர மறவர்களே உன்னதத் தியாகிகளே
சாகா வரம் பெற்ற மண்ணின் மைந்தரே
எம் சோகம் தீர்த்து எம் பாகம் பெற்றிட
வீறு நடை கொண்டு வந்திடுவீரே
கார்த்திகை மலரும் காந்தள் மலராய்
பூத்திடும் போர்வீரரே எழுந்திடுவீர்
இலங்கைத் தீவை காத்திடுவீர்
மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய்
தலை சாய்ப்போமே.