வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

02.03.23
ஆக்கம்-262
நிமிர்வின் சுவடுகள்

பிறந்து வளர்ந்து வந்த பாதையில்
மூதாதையரால் பதிந்து போன
நினைவுகள்,சம்பவங்கள் நிலைத்து
நின்று மனதிலிருந்து நீங்காது
இடம் பெற்ற சுவடுகளே

பேர,பூட்ட பிள்ளைகளைத் தாலாட்டி
சீராட்டி சோறூட்டி அறிவுரைக் கதை,
முதுமொழி பகிர்ந்திட நாளும் பொழுதும்
நேரந்தெரியாது தாய் மொழியை அழகுறச்
சொல்லித் தந்து நல் ஆசிரியர் போலானாரே

இருளிற்குள் ஒழிந்திருந்த எம் திறனை
வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்
அனுபவசாலிகளாய் உலகில் உயர்வு
பெற்றோர் மூத்தோரே முன்மாதிரியாய்
வாழ்ந்தவரே

எந்தப் பிழை செய்திடினும் மன்னித்து
பொறுமை, கடமை,கண்ணியம்,
கட்டுப்பாடு தந்து அன்பு வழி சென்று
நேர்மையில் வாழ்ந்து நிமிர்ந்திட- நல்
வழிகாட்டியாய் மனதில் இன்பமுடன்
நிறைந்தனரே

உதிரந் தந்த உதாரண எண்ணங்கள்
ஊட்டிய அறிவுக் கோயிலான போற்றத்தகும்
மூத்தோரே எம் வாழ்வில் இன்று போலென்றும்
ஈடு இணையற்றவராய் எம் வாழ்வில்
நிமிர்வின் சுவடுகள் ஆவார்.

மூத்தோர் தின வாழ்த்துகள்.